தென் மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்.. தெற்கு ரயில்வே புது அறிவிப்பு..!
கோடை கால சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, திருச்சி - பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மே 5, மே 12,மே 19, மே 26ஆம் தேதிகளில் செவ்வாய்கிழமை தோறும் திருச்சி பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே நாளில் மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 3.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. இந்த சேவை மே மாதத்தில் ஊர்களுக்கு படையெடுப்பவர்களுக்கு பெரிதும் உதவக் கூடும். குறிப்பாக, பகல் நேரத்தில் பயணிப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
திருச்சி - பெங்களூரு ரயில், ஸ்ரீரங்கம், அரியலூர, விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், சேலம், திருப்பத்தூர், குப்பம், பங்காரப்பேட்டை, வைட்பீல்ட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட், பெங்களூரு சிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம் - தூத்துக்குடி இடையே பயணிகளின் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, தூத்துக்குடி - தாம்பரம் இடையே மே 4ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை திங்கள்கிழமை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் - தூத்துக்குடி ரயில் மே 5ஆம் தேதி முதுல் ஜூன் 9ஆம் தேதி வரை செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக இந்த சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தாம்பரம் - தூத்துக்குடி ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மலலை 3.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் - தூத்துக்குடி ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சாத்தூர், கோவில்பட்டி, மேலூர், தூத்துக்குடிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

