குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! சிவகாசி பட்டாசுகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்! - அமைச்சர் கீர்த்தனா அதிரடி!

 
1

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு இருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா  தமிழகம் திரும்பினார். 

விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது: சீனாவிற்கு நிகராக சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சீனாவில் இருப்பவர்கள் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

ஆனால் நாம் இவ்வளவு பெரிய திறமையை வைத்து கொண்டு இதுவரை ஏற்றுமதி செய்யாமல் இருந்து கொண்டு இருக்கிறோம். இதற்கான ஏற்றுமதிக்கு சட்டப்படி, சரியான வழிமுறைகளை பின்பற்றி பண்ண முடியும் என்பதை படித்து அதற்கு பாலிசி உருவாக்கி ஏற்றுமதி செய்ய வேண்டும். விருதுநகரின் தரமே உயர்ந்துவிடும். நமக்கு அருகில் துறைமுகம் இருக்கிறது. அதனால் எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். 

பொருளாதாரத்தில் 2ம் இடத்தில் இருக்கும் சிவகாசியை இதுமேல் கொண்டு செல்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. கொரியாவிற்கு நான் சென்றபோது சிவகாசி பட்டாசு உற்பத்தி குறித்து சொன்னதற்கு ஆச்சரியப்பட்டு ஏற்றுமதி செய்ய அவர்களே அழைப்பு விடுத்தனர். போலந்து நாட்டில் ஒரு கஸ்டமர் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறேன் என்று சொன்னார்கள். இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் வழிகாட்டுதல் உடன் இந்த பாலிசியை எப்படி கொண்டு வர வேண்டும் என்பதை கண்டிப்பாக படித்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா கூறினார்.