குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்படும்..!
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.நேற்று பல்வேறு விவகாரத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தார். திமுக அரசு மீதான அவரின் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
எடப்பாடி பழனிசாமி: இரவோடு இரவாக மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட உள்ளதாக கூறி, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளீர்கள். ஒவ்வொரு ஆண்டும் தான் கோடைக்காலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை தேர்தல் உஷ்ணம் அதிகம் உள்ளதால் 5000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன. இது உங்களுக்கு (திமுக) தேர்தல் காய்ச்சால் ஏற்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்: இது புது திட்டம்.மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்படும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: மக்களுக்கு நாங்கள் கொடுப்பது எல்லாம் சூழ்ச்சி என்றால் பீகார், மகாராஷ்டிராவில் பாஜக கொடுத்துள்ளதே அது சூழ்ச்சி இல்லையா? என பதில் கூறினார்

