குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..!! நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து..!

 
Rajmohan

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சென்னையில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

 

மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அறவழியில் போராடிய மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக என கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள பதிவில், '' தமிழக முதல்வர் விஜயின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.