மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்- பேரவையில் நாளை மு.க.ஸ்டாலின் முக்கிய சட்டமுன்வடிவு தாக்கல்

 
MKstalin

தமிழகத்தில் அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும்  சட்ட முன்வடிவை நாளை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிமுகம் செய்ய உள்ளார்.

assembly

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்துகிறது. அவர்களுக்கு மணிமகுடம் வழங்குவது போல, மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்திலுள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும்  சட்ட முன்வடிவை நாளை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிமுகம் செய்ய உள்ளார்.

இதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டு  மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள்