குட் நியூஸ் சொன்ன துணை முதல்வர்..! விரைவில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்..!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக விளக்கம் கொடுத்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும். ஒன்றிரண்டு மாதங்களில் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் விண்ணப்பித்தவர்களுக்கான முதல் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. தீபாவளி பரிசாக இவர்களுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.

