ஆன்மீக பக்தர்களுக்கு செம குட் நியூஸ்! தரிசனம் முதல் தங்குமிடம் வரை அனைத்தும் இனி 'ஒரே கிளிக்கில்'!

 
1

2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் சுமார் 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் திமுக, அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியிருந்தார். இந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்று விஜய் முதலமைச்சரானார். அவரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை ரமேஷூக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ரமேஷ்,கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோயில்களில் அதிரடி ஆய்வுகளை நடத்தி நடத்தினார். அவர் அதிகாலை வேளையில் திருச்செந்தூர் கோயிலில் மாஸ்க் அணிந்து திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, சிறப்பு தரிசனத்துக்கு லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்தார். அதன் பின் அதிரடியான நடவடிக்கையும் எடுத்தார்.

இந்த நிலையில் அனைத்து கோயில் நிர்வாகத்துக்கும் அறநிலையத் துறை சார்பில் சுற்றரிக்க்கை அனுப்பியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் கோயில் வளாகங்களில் இயங்கும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விலைப் பட்டியல் காட்சிப்படுத்தல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தூய்மையான இறைவனுக்கு பூஜைக்கு பயன்படுத்தும் தரமான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். அரசிடம் அனுமதி பெறாத எந்த பொருட்களையும் விற்க அனுமதி கிடையாது.

கோயில் கடைகளில் பூஜைப் பொருட்களின் விலைப் பட்டியலை பக்தர்கள் எளிதில் அறியும் வண்ணம் காட்சிப்படுத்துவது கட்டாயம் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நிர்ணயம் செய்யப்பட்ட விலையை தாண்டி அதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில், தரிசன அனுமதி சீட்டு, பூஜை முன்பதிவு, அன்னதான அனுமதி சீட்டு, பிரசாதம் வாங்குதல், திருமண மண்டப முன்பதிவு மற்றும் தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இணையதளத்தின் மூலம் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.

முதற்கட்டமாக இரண்டு கோவில்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதன் வெற்றியைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற முக்கிய கோவில்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அறநிலையத்துறை ஆணையரும், NIC அதிகாரிகளும் விரிவாக விளக்கமளித்துள்ளனர். கூடிய விரைவில் இந்த இணையதளம்  செயல்பாட்டிற்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.