பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இந்த 2 மாவட்டங்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை..!

 
1

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக. 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் அவதரித்த நாள், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரமாகும். ஆடிப்பூரம் விழா அனைத்து கோயில்களிலும் சிறப்பாக நடைபெறும். ஆடிப்பூரத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறும். இதையொட்டி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா ஆக. 14 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.