பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிப்போகிறது..!

 
school

கோடை விடுமுறை முடிந்து, இந்தாண்டு 1 முதல் 3ம் வகுப்பு வரையிலும், 4 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இதனிடையே, நிர்வாக வசதிக்காகவும், வெவ்வேறு வகுப்புகளில் குழந்தைகள் படிப்பதால் பெற்றோர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், ஒரே தேதியில் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், குடிநீர் வசதி, தூய்மைப்பணி, போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றை தமிழக அரசு ஆய்வு செய்தது. அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜூன் 4ம் தேதி திறக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், மாணவர்களின் நலன், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் கல்வி அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.