பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை
Sep 24, 2026, 11:50 IST1790230844767
தமிழக மாநிலப் பாடத்திட்டப் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாகத் தடை விதித்துள்ளது. தடையை மீறி வகுப்புகள் நடத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும்: அரசு பள்ளிகளில் இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது.

