வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! பெட்ரோல், டீசல் விலை குறைந்தது..!!
Updated: May 28, 2026, 12:31 IST1779951674014
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.108.20-க்கு விற்பனையானது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து, ரூ.99.98-க்கு விற்பனையானது. கடந்த 14 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.36-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7.59-ம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் சற்று குறைந்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.99.55-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

