நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்..!! 2வது நாளாக குறைந்த தங்கம் விலை..!!

 
Gold

பொதுவாக டாலர் மதிப்பை பொறுத்து, முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டத்தரும் பங்குச்சந்தை அல்லது பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தை தேர்ந்தெடுப்பர்.

ஆனால். தற்போது பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால், தங்கம் விலை திடீரென உயர்ந்தாலும், அவ்வபோது குறையும் என்கின்றனர். கடந்த ஒருசில மாதங்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சவரன் விலை குறைந்துள்ள நிலையில், இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழ் குறைவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தங்கத்தின் விலை இன்று (ஜூலை.8) சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. நேற்று (ஜூலை.7) ஒரு சவரன் ரூ.1,07,600க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து, ரூ.13,330க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது