நகைக்கடன் வாங்குவோருக்கு செம நியூஸ்! கூட்டுறவு வங்கிகளில் கிராமுக்கு இனி ₹10,000 வரை கடன்?

 
1

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகையை அடமானம் வைத்தால், கிராமுக்கு தற்போது அதிகபட்சமாக, 8,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று, 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 1 லட்சத்து, 19,600 ரூபாயாக இருந்தது. தேசிய மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த வங்கிகள், நிதி நிறுவனங்களில், கிராம் தங்கத்துக்கு அதிகபட்சம், 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க கூட்டுறவு நிறுவனங்களிலும், கிராம் தங்கத்திற்கு அதிகபட்சம், 9,000 முதல், 10,000 ரூபாய் வரை கடனை உயர்த்த, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, வரும் வாரம் கூட்டுறவு துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.