IT ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்... வொர்க் பிரம் ஹோமுக்கு அடுத்து 'வொர்க் பிரம் பார்க்'! இனி இயற்கைச் சூழலில் வேலை பார்க்கலாம்!

 
1

ஐதராபாத்தில் 'வொர்க் பிரம் பார்க்' என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 30 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக மாதாபூர், சேரிலிங்கம் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவை வருகிற ஜனவரி 1-ந்தேதிக்குள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஒட்டுமொத்தமாக 300 பூங்காக்கள் இப்பணிக்காக தயார்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக சைபராபாத் மாநகராட்சி ஆணையர் சுருஜனா தெரிவித்தார்.

ஐ.டி. ஊழியர்களின் பணிக்காக இந்த பூங்காக்களில் அதிவேக வைபை, சார்ஜிங் வசதி, இருக்கைள், மேஜைகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிற்றுண்டி மையங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஐ.டி. ஊழியர்கள் மட்டுமின்றி, ஸ்டார்ட்-அப் குழுக்கள், மாணவர்கள் போன்றவர்களும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என சுருஜனா மேலும் கூறினார்.