ஐபிஎல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: மெட்ரோவில் இலவசமாக செல்லலாம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஐபிஎல் 2026 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்கவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சிஎஸ்கே கிரிக்கெட் லிமிட்டட் நிறுவனத்துடன் இணைந்து ஐபிஎல் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (மே.2) நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 44-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வைத்திருப்பவர்கள், அதில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.

