இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! அதிரடியாகக் குறைந்த முட்டை விலை — இதோ இன்றைய நிலவரம்!

 
Q

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக (ரூ.5.60) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக (ரூ.5.40) குறைந்துள்ளது. சென்னையில் முட்டை கொள்முதல் விலை 6.20 ஆக உள்ளது.

முட்டை விலை கடந்த 4 நாட்களில் 60 காசுகள் சரிந்துள்ளது. பறவைக்காய்ச்சல் காரணமாக நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன் நாடு இடைக்கால தடை விதித்துள்ளதால், சுமார் 6 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அத்துடன், சபரிமலை சீசன் என்பதால் முட்டையின் நுகர்வும் குறைந்துள்ளது. இதன் காரணமாக முட்டை கொள்முதல் விலை குறைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.