ஆபரணத் தங்கம் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி: கிராமுக்கு ரூ.55 சரிவு!

 
Gold

தங்கம் விலையானது கடந்த மாதத்தில் திடீரென ஏற்றம் காணத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு நாள் ஏறுவதும் அடுத்த நாள் இறங்குவதுமாக நிலையற்ற தன்மையில் இருக்கிறது. இதனால் கையில் கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் தங்கம் எப்போது வாங்குவது? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

தங்கம் விலை இந்தியாவில் மட்டும் தான் இப்படி ஆட்டம் காட்டுகிறதா? என்று கேட்டால் இல்லை. சர்வதேச அளவில் தினந்தோறும் விலை மாற்றம் ஏற்படுவதே நமது நாட்டிலும் விலை ஏற்ற இறக்கத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சரி, தங்கம் விலை எப்போது குறையும் என்று தானே கேட்கிறீர்கள்? அமெரிக்க ஃபெடரல் வங்கி ஒன்றிரண்டு முறை வட்டி விகிதத்தை உயர்த்தினால் தான் அது சாத்தியமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

.ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 16) 1 கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

இன்று (செப்டம்பர் 17) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து, ரூ.1,12,080-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.