தங்கம் வாங்குவோருக்கு சூப்பர் செய்தி! தொடர் ஏற்றத்திற்கு பின் இன்று குறைந்த தங்கம் விலை!
தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1 லட்சத்துக்கும் கீழ் செல்ல வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால் எப்போது நகை வாங்கலாம்? தங்கம் மீது முதலீடு செய்ய இப்போது சிறந்த நேரமா? என்பது போன்ற பல கேள்விகளுடன் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தங்கம் விலை ஓரிரு நாட்களாக தடாலடியாக அதிகரித்து வருகிறது. ஆக்ஸ்ட் 6 அன்று திடீரென சவரனுக்கு ரூ. 2,240 அதிகரித்த நிலையில், அடுத்த நாளே மீண்டும் ரூ. 2,160 அதிகரித்தது. இரண்டே நாட்களில் சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்த நிலையில், சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அடுத்த நாள் குறையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
(ஆகஸ்ட் 7) காலை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து அதிர்ச்சியளித்தது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.
(ஆகஸட் 8) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.6,120 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 10) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

