தோனி ரசிகர்களுக்கு குட் நியூஸ்..! சிஎஸ்கே கேப்டனாகும் தோனி?

2023ல் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி. அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று ஏப்ரல் 5ல் டெல்லிக்கு எதிரான போட்டியில் கெய்க்வாட் விளையாடமாட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்த நிலையில் அவர் இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் இன்று நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டது.
அப்படி இன்று நடைபெறும் போட்டியில் இடம் பெறவில்லை என்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அதில், ரவீந்திர ஜடேஜா மற்றும் எம் எஸ் தோனி இருவரது பெயரும் இடம் பெற்றது. ஏற்கனவே ஜடேஜா சிஎஸ்கே அணியை வழிநடத்தி அடுத்தடுத்து தோல்விகளை பெற்றுக் கொடுத்தார். ஆதலால், அவர் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் குறைவு.
கெய்க்வாட் இல்லாத நிலையில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்க வேறு எந்த வீரரும் தற்போது சிஎஸ்கே அணியில் இல்லை. இதனால் தோனிக்கு கேப்டன் பதவி கிடைக்கும். ஒருவேளை தோனி கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் அனுபவம் வாய்ந்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.