குட் நியூஸ்..! தொடர் சரிவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை..!!

 
Q Q

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. பங்குச்சந்தை, கடன் பத்திரங்களையும் விட இந்தாண்டு அதிக லாபம் கொடுத்த முதலீடாகத் தங்கம் இருக்கிறது. ஒரே ஆண்டில் தங்கம் விலை சுமார் 67% உயர்ந்துள்ளது. இதுவரை இவ்வளவு வேகமாகத் தங்கம் விலை உயர்ந்ததே இல்லை எனச் சொல்லலாம்.

டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் டிசம்பர் 4ம் தேதியான நேற்று விலை சற்று குறைந்தது.ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 12,020 ரூபாயாகக் குறைந்தது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 96,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை பெரும்பாலும் ஏற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், இன்று(டிச. 5) விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22K தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.196க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,96,000க்கும் விற்பனையாகிறது.