குட் நியூஸ்..!! கடந்த 2 நாட்களில் ரூ.3,500க்கு மேல் குறைந்த தங்கம் விலை..!!
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தங்கம் விலை கடந்த 8 மாதங்களில் சவரனுக்கு சுமார் ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது.
அதன் உச்சமாக டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் மற்றும் வெள்ளி விலை, உச்சமாக ரூ.1.04 லட்சம் வரை சென்றது. ஆனால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது.
நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.420 குறைந்து, ரூ.12,600க்கு விற்பனையானது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,80க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து, ஒரு கிராம் ரூ.258க்கு விற்பனையாகியது.
இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,550க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து, ரூ.1,00,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ.258க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.3,500க்கு மேல் குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை தந்துள்ளது.


