குட் நியூஸ்..! இனி சுங்கச்சாவடியில் நிற்க தேவையில்லை..! வந்தாச்சு MLFF திட்டம்..!

 
1

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிக்க நாம் தனியாகச் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு முறையும் கவுண்டரில் நாம் பணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், பாஸ்டேக் முறை வந்த பிறகு இது மாறியது. இந்த முறையில், சுங்கச்சாவடி கவுண்ட்டரில், வாகனத்தில் உள்ள ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, கட்டண பிடித்தம் மேற்கொள்ளப்பட்டு வரகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து பாதிப்பு சற்றே குறைந்தது. ஆனாலும், வாகனங்கள் கவுண்ட்டரில் ஸ்கேனுக்காக நிற்க வேண்டும்.

தற்போது, வாகன ஓட்டிகளுக்கு அந்த சிரமத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கில், புதிய, பெரிய மாற்றம் ஒன்றை கொண்டுவருகிறது போக்குவரத்துத் துறை அமைச்சம். அதாவது நாட்டில் இருக்கும் முக்கியமான நெடுஞ்சாலைகளில் Multi-Lane Free Flow எனப்படும் தடையற்ற கட்டண வசூல் முறையைச் சாலைப் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்துகிறது.


இந்த தொழில்நுட்பத்தின்படி, ஏஐ அடிப்படையில் இயங்கும் ANPR தானியங்கி கேமிராக்கள், வாகனங்களின் எண்களை தனித்தனியாக பகுப்பாய்வு செய்து. ந்த எண்களுக்குரிய FASTag-லிருந்து கட்டணத்தை தானாக எடுத்துக்கொள்ளும் தன்மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதால் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கலாம். 

தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர். பரனூர் சுங்கச்சாவடிகளில் பரிசோதிக்கத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது

இந்த முறை அமலுக்கு வரும்போது, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயண நேரம் மிச்சமாகும். மேலும், எரிபொருள் சேமிப்பு மற்றும் காற்று மாசு குறைப்பு என ஏகப்பட்ட நன்மைகளும் இதனால் ஏற்படும்.இதன் மூலம் விரைவான, திறமையான தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கை உருவாக்க முடியும் என்றும், சுங்க வருவாயையும் மேம்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.