குட் நியூஸ்..! ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்..!
கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்ய மொத்த மற்றும் சில்லறை விற்பனை முகவர்களுக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் விநியோகம் சில்லறை விற்பனையாளர்கள் (Agent/Parlour) மற்றும் மொத்த செய்வதற்கு விற்பனையாளர்கள் உபபொருட்கள் (WSD-ByProducts) கீழ்கண்ட பகுதிகளுக்கு நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், தோகைமலை, பரமத்தி, சின்னதாராபுரம், கடவூர், தென்னிலை பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பால் உபபொருட்கள் விற்பனை செய்திட சொந்தமாகவோ, வாடகை அடிப்படையிலோ இடவசதி மற்றும் பால் பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு தேவையான குளிர்சாதன வசதியும், உபபொருட்கள் விநியோகம் செய்ய வாகன வசதிகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சில்லறை விற்பனை முகவர்கள் விற்பனை செய்வதற்கான சொந்த கட்டிடம் வாடகை கட்டிடமும் இடவசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: பொது மேலாளர், கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிட், தோரணக்கல்பட்டி, டி.செல்லாண்டிபாளையம் அஞ்சல், கரூர் 639003. தொடர்புக்கு தொலைபேசி எண்: துணை மேளாளர் விற்பனை பிரிவு 95859 75281 விற்பனை பிரிவு அலுவலர்கள் 96983 77992, 97865 71615 என தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

