குட் நியூஸ்..! விரைவில் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடை வழங்கப்படும்..!

 
1 1

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீருடை வழங்கிய பின் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 79,654 மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்பட உள்ளது என கூறியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கு தரமான சீருடை முறையாக வழங்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து சீருடைகளை முறையாக வழங்குகிறது என்றும் தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.