குட் நியூஸ்..! இனி இந்த வந்தே பாரத் ரயில் கோவையில் நின்று செல்லும் - ரயில்வே அமைச்சகம்..!

 
1 1

கோவை வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெங்களூரு எர்ணாகுளம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை ஜவுளி நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் ஆகிய பகுதிகளில் நின்று செல்ல வேண்டும் என்று தான் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி இடம் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின்பு நேரில் கோரிக்கை வைத்ததாக கூறியிருந்தார். 

இதற்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெங்களூரு எர்ணாகுளம் இடையேயான வந்தே பாரத் ரயில் கோவை உட்பட ஈரோடு திருப்பூர் சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

விரைவில் துவங்க உள்ள இந்த ரயில் சேவை புதன்கிழமைகள் தவிர வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் இருந்து காலை 5:10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 8:13 மணிக்கு சேலத்திலும் 9:00 மணிக்கு, ஈரோட்டிலும் 9: 45 மணிக்கு, திருப்பூரிலும் காலை 10:33 மணிக்கு கோயம்புத்தூரிலும் நின்று செல்லும். 

மறு வழியே எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு வரும் பொழுது, மாலை 5:20 க்கு கோவையிலும், 6:03 மணிக்கு திருப்பூரிலும் 6:45 மணிக்கு ஈரோட்டிலும் 7:18 மணிக்கு சேலத்திலும் நின்று செல்லும். 

இந்த அறிவிப்பு கோவை ரயில் பயணிகள் இடையேயும் தொழில்துறையினர் இடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மக்களும் தொழில்துறையினரும் குடியரசு துணைத் தலைவருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.