குட் நியூஸ்..! ரூ.5000 விலை குறைந்தது..!!
Oct 28, 2025, 10:39 IST1761628179141
தமிழகத்தில் நேற்று (திங்கட்கிழமை), தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 11,450 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து, 91,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்றும் (அக் 28) தங்கம் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரம் தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே தங்கம் விலை ரூ.1,600 சரிந்திருப்பது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


