குட் நியூஸ்..! குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 8 வரை அவகாசம் நீட்டிப்பு..!

 
tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே (நவ.5) இரவுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், தேர்வர்களின் வசதிக்காக தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மொத்தம் 6,574 பணியிங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியானது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர் உள்ளிட்ட 46 பதவிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தேர்வு ஜன., 10 ம் தேதி நடக்கிறது.இதற்கு 10 ம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. கடந்த மாதம் ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு துவங்கிய நிலையில், இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க கடைசி நாள் நாளையுடன் முடிவடைவதாக இருந்தது.ஆனால், தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு அனைத்து பிரிவினருக்கும் உயர்த்தப்பட்டது. இதனால், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாளை நவம்பர் 8 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.