குட் நியூஸ்..! புதிதாக 250 கிளைகள் தொடங்கப்படும்: எஸ்.பி.ஐ.,!
Sep 11, 2026, 12:43 IST1789110823674
எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் எழுத்தர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் 11,000 முதல் 12,000 பேரை நியமிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் 4,640 அதிகாரிகள், 19,340 உதவியாளர்கள் மற்றும் 1,653 ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 25,633 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 2.45 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கிடும் நிறுவனங்களில் ஒன்றாக எஸ்.பி.ஐ., திகழ்கிறது.
புதிதாக உருவாகி வரும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வர்த்தக மையங்களில் வங்கியின் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 200 முதல் 250 வரை புதிய கிளைகள் தொடங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

