குட் நியூஸ்..! ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு..!

 
ration shop

ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்வு செய்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த  ஒரு வருடம் வரை விற்பனையாளர்களுக்கு 7500-ம், கட்டுனவர்களுக்கு 6,600ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்..

ஓராண்டு பணி முடிந்தவர்களில் விற்பனையாளர்களுக்கு 9900 முதல் 39, 600 வரையும், கட்டுனர்களுக்கு 9 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும் புதிய ஊதியக்கற்றையில் காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முந்தைய ஊதிய கற்றையில் தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தை கணக்கில் கொண்டு அதற்கு 15 சதவீதம் சேர்த்து வரும் கூடுதல் தொகையினை அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கூடிய அடிப்படை ஊதியத்தில் 55 சதவீதம் அகவிலைப்படி பெற அனுமதிக்கப்படுகிறது.. பின்னர் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வு இந்த பணியாளர்களுக்கும் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.