குட் நியூஸ்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்கிறது..! எவ்வளவு தெரியுமா ?
தமிழக அரசு தற்போது டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.1,000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் பணிபுரிப்வர்களின் பல்வேறு கோரிக்கைகளை அனைத்து தொழிற்சங்களும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் பரீசலிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஏற்கனவே பெற்று வரும் ஊதியத்துடன் தற்போது கூடுதலாக ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும். இந்த சம்பள ஊயர்வு ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பள உயர்வு மூலம் 24,033 கடை ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
தொடர்ந்து, கிடங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் கடைப்பணி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு மற்றும் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்க வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, வெளியில் உள்ள கடை பணியாளர்களுக்கு குற்றச்சாட்டுகள் தன்மைக்கேற்ப மீண்டும் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

