குட் நியூஸ்..! சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தம்..!

 
1

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சென்னை மாநகராட்சி, சத்தமின்றி சொத்து வரியை இரண்டு மடங்கிற்கு மேல் உயர்த்தி உள்ளது, சொத்து உரிமையாளர்கள் 30,000 பேருக்கு அனுப்பியுள்ள வரி உயர்வு ஆணை வாயிலாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 'சொத்து வரி உயர்த்தப்படவில்லை; வரி மறு சீராய்வுதான் நடந்துள்ளது' என, மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்து இருந்தது.இந்நிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சொத்து வரி மாற்றியமைப்பு உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருத்திய மதிப்பீடு தொடர்பாக மக்கள் எழுப்பிய கோரிக்கைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.குறைவான மதிப்பீடு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கு வரி மதிப்பீட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. முன்பு இருந்த அளவுக்கே வரித்தொகை மாற்றியமைக்கப்படும்.ஏற்கனவே வரித்தொகை செலுத்தியவர்களுக்கு அத்தொகை அடுத்தடுத்த முன்வரியாக ஈடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.