குட் நியூஸ்..! இனி Uber செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..!
ஊபர் (Uber) செயலியில் இனி நேரடியாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டுமின்றி, ரயிலின் பிஎன்ஆர் (PNR) நிலையையும் செயலி வாயிலாகவே நேரடியாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே ஆட்டோ, கார், பைக், மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளை வழங்கி வரும் ஊபர், தற்போது ரயில் புக்கிங் சேவையையும் தன் செயலியில் ஒருங்கிணைத்துள்ளது.
இனி வீட்டில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கான Uber வாகனத்தை முன்பதிவு செய்வது முதல் ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் PNR நிலையை பார்ப்பது வரை ஒரே செயலியில் பல்வேறு சேவைகளை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன் மூலம் நகர்ப்புற பயணங்களில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் வகையில் Uber தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
ஊபர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் வணிக மேம்பாட்டு இயக்குநர் அர்னாப் குமார் கூறுகையில், இந்தப் புதிய அம்சம், பயணிகள் ஊபர் செயலிக்குள்ளேயே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், PNR நிலையை சரிபார்க்கவும், ரயில் நிலையங்களுக்கு சென்று வரவும் பயண ஏற்பாடுகளைச் செய்யவும் அனுமதிக்கும்.
"ரயில் பயணச்சீட்டு வழங்குவதில் இக்ஸிகோவின் நிபுணத்துவத்தை உபெரின் மொபிலிட்டி தளத்துடன் ஒன்றிணைப்பதற்காக அவர்களுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று அவர் கூறினார்.

