குட் நியூஸ்..! இனி சிக்னலில் 45 விநாடிகள் தான்..!!

 
Q

போக்குவரத்து துணை கமிஷனர் மெகலினா ஐடன் நிருபர்களிடம் கூறியதாவது: சாலை பாதுகாப்பு குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் அதிகளவில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழிப்புணர்வு செய்து வருகிறோம்.

தற்போது சென்னை முழுவதும் பல இடங்களில் தானியங்கி கேமரா மூலம் வழக்கு பதிவு ெசய்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு சேலான் அனுப்பி வருகிறோம். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பீக் ஹவரில் அனைத்து சிக்னல்களில் அதன் நேரத்தை குறைத்து இருக்கிறோம். வழக்கமாக அனைத்து சிக்னல்களில் 90 விநாடிகள் இருந்தது, அதை 45 விநாடிகளாக குறைத்து இருக்கிறோம். இதனால் சிக்னல்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைத்து இருக்கிறோம். முக்கியமாக மெட்ரோ பணிகளால் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் மெட்ரோ பணிகளால் நெரிசல் இருக்கிறது. அதை குறைக்கும் வகையில் அந்த பகுதிகளில் அதிக காவலர்கள் நியமித்து இருக்கிறோம். அதேபோல், அண்ணா சாலையில் சைதாப்பேட்டை பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் நெரிசல் இருக்கிறது.

இந்த இரண்டு பணிகள் முடிந்ததும் போக்குவரத்து நெரிசல் சரியாகிவிடும். சாலை விபத்துகளில் இறப்பு அதிகமாக ஹெல்மெட் அணியவில்லை என்பதால் நடப்பதாக கூறமுடியாது. அதிகமான நபர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள். பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் கூட ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். பைக் ஓட்டும் போது, நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் பலர் செல்போனில் பேசியபடி செல்கின்றனர். இதனால் தான் தற்போது விபத்துகள் நடக்கிறது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது. பைக் ரேசில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பைக் ரேசை குறைத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.