குட் நியூஸ்..! தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்..!

 
1

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில்,  வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில்.  தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது.  இந்த நிலையில்,  தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுத்திருந்தது.

நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் படி,  தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. மேலும்,  தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவின் ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும்,  ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,  தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.  மே 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.  இதையடுத்து, தமிழ்நாட்டில் மே 2ம் தேதி 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.