குட் நியூஸ்..! இனி ஆக்கிரமிப்பு புகார் வந்தால் 30 நாளுக்குள் ஆய்வு கிடப்பில் போட்டால் நடவடிக்கை பாயும்..!

 
1

 ஐகோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  

நிலம், நீர்நிலை, பூங்கா, சாலை போன்ற பொது இடங்களில், ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் வந்தால், புகாரை அதிகாரிகள் கிடப்பில் போட முடியாது. அலட்சியமாகவோ, ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகவோ எந்த அதிகாரியாவது புகாரை கிடப்பில் போட்டால், அவர் மீது விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. 

ஆக்கிரமிப்பு குறித்து புகார் வந்தால், 30 நாட்களுக்குள் விசாரணையை துவக்க வேண்டும்; 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அரசின் அனைத்து துறைகளுக்கும் ஐகோர்ட் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.  ஆக்கிரமிப்பு புகார்களை விசாரிக்கும் பொது கடமையில் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டறிந்தால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது உயர் அதிகாரியின் பொறுப்பு என்று கோர்ட் வலியுறுத்தியுள்ளது. 

லஞ்ச ஊழல் பெருக்கத்துக்கு ஆக்கிரமிப்புகள் மிக முக்கியமான காரணம் என்பதால், இதில் ஜீரோ டாலரன்ஸ் என்கிற முழு சகிப்பின்மையை பின்பற்றுமாறு, அரசு செயலாளர்களுக்கு முதல்வர் விஜய் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். ஐகோர்ட் கண்டிப்பும் சேர்ந்துள்ளதால், இனி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் வேகம் பிறக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.