குட் நியூஸ்..! பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், மறுநாள் மாட்டு பொங்கல் விழாவும் நடைபெறுகிறதுஜனவரி 17ல் காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு அரசு விடுமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கூடுதல் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 19ஆம் தேதியே மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.
இதனிடையே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் இளைஞர்கள் பலரும் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


