மகிழ்ச்சி செய்தி! - கோடை வெயிலுக்கு நடுவே தமிழகத்தின் இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை..!

 
rain

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை: 

மேற்கு தொடர்ச்சி மலை, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 30) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 1ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மே 2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 5ம் தேதி வரை உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மே 3ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கு நிலையில் கடலோர தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.