குட் நியூஸ்..! தங்கம் விலை குறைந்தது... இதே நிலை நீடித்தால் மீண்டும் மாலையிலும் குறையும்..!

 
gold

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கம் விலை சரிய தொடங்கியது. ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து ரூ.14 ஆயிரத்திற்குள் வந்தது. எனினும், அவ்வப்போது சற்று விலை அதிகரித்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. மேலும், சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்ததும், தங்கத்தின் விலை குறைய காரணமாக இருந்தது.


இந்நிலையில்,  சென்னையில் இன்று கிராமுக்கு 100 குறைந்து 13,950-க்கு விற்பனையாகிறது.சவரனுக்கு 800 குறைந்து 1,11,600-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில் பிற்பகலிலும் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் தலைகீழாக 2.5%(120 டாலர்கள்) குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது