குட் நியூஸ்..! தீபாவளிக்கு ரேஷனில் இலவச மளிகை தொகுப்பு..!
Oct 14, 2026, 13:30 IST1791964817000
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 5 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை வழங்க உள்ளது.
தீபாவளி சிறப்புத் தொகுப்பில் 2 லிட்டர் சமையல் எண்ணெய், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என 5 வகையான பொருட்கள் வழங்கப்படும். இந்தப் பொருட்கள் அனைத்தும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே ரேஷன் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
மேலும், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் மீண்டும் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

