குட் நியூஸ்..! வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!

 
1

மருத்துவர்கள் குறைந்தபட்ச அளவிலான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் எனப் புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

சாதாரண உடல்வலிகள் மற்றும் காய்ச்சலுக்காக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு அல்லாத வீக்கமுறிவு மருந்துகளை (NSAIDs) பொதுமக்கள் தொடர்ந்து உட்கொள்வது அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முறையற்ற மற்றும் நீண்டகாலப் பயன்பாடு சிறுநீரகங்களின் செயல்பாட்டைப் பாதிப்பதோடு, நாள்பட்ட சிறுநீரக நோய் உருவாவதற்கும் சிறுநீரகம் செயலிழப்பதற்கும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைக் கருத்திற் கொண்டு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், ஆன்டிபயாடிக் (Antibiotics) மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக உட்கொள்வது மற்றும் தேவையற்ற முறையில் பயன்படுத்துவது நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனை (Antimicrobial Resistance) அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷெட்யூல் எச் (Schedule H) மற்றும் எச் 1 (Schedule H1) பிரிவுகளின் கீழ் வரும் இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி விற்பனை செய்யும் மருந்தகங்கள் (Pharmacies) மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.