குட் நியூஸ்..! வசதி குறைந்த எம்எல்ஏக்களுக்கு கார்; முதல்வர் விஜய் திட்டம்..!

 
1

.வி.சி.க., - எம்.எல்.ஏ., ஜோதிமணி, சட்டசபையில் பேசுகையில், 'வசதி குறைந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, கார், உதவியாளர், அரசு செலவில் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, வசதி குறைந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்க, முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

அரசு செலவில் வழங்குவதா அல்லது சொந்த நிதியில், வழங்குவதா என்பது குறித்து, அவர் ஆலோசித்து வருகிறார்.நிதி நெருக்கடி காரணமாக, அரசு செலவில் கார் வாங்கி கொடுத்து விட்டு, எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளத்தில், மாத தவணைத்தொகை வசூலிப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது என, கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.