குட் நியூஸ்..! இன்று முதல் இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடியாக குறைகிறது..!

 
1

இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைச் செலவு மற்றும் மருந்துகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், புற்றுநோய் நோயாளிகளுக்குப் பெரும் ஆறுதல் அளிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையைக் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

1,000-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளன. இதில் 600-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும், அதிகபட்சமாக 96.45% வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையால் இந்திய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,502 கோடிக்கும் மேல் சேமிப்பு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

உதாரணம்: முன்பு ரூ.40,000 வரை விற்கப்பட்ட சில முக்கிய புற்றுநோய் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தற்போது சுமார் ரூ.2,700 என்ற விலைக்குக் குறைக்கப்பட்டுள்ளன

  • மார்பகப் புற்றுநோய் மருந்து (Palbociclib): இதன் ஒரு பாக்கெட் விலை ₹40,421-ல் இருந்து அதிரடியாக குறைக்கப்பட்டு இனி ₹2,720-க்குக் கிடைக்கும்.

  • அனஸ்ட்ரோசோல் (Anastrozole): மார்பகப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 10 மாத்திரைகளின் விலை ₹695.76-ல் இருந்து ₹73 ஆக குறைந்துள்ளது.

  • கீமோதெரபி மருந்து (Thiotepa): கீமோதெரபி சிகிச்சைக்கு பயன்படும் இம்மாத்திரையின் ஒரு குப்பி விலை ₹80,072-ல் இருந்து ₹7,150 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

  • புல்பிராக்கா & டாப்ருமாப் ஊசி மருந்துகள்: RPG லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் புல்பிராக்கா ஊசி மருந்து ₹26,072.16-ல் இருந்து ₹5,491 ஆகவும், டாப்ருமாப் ஊசி மருந்து ₹22,031.25-ல் இருந்து ₹5,941 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

  • பெவாசிசுமாப் & அசாசிடிடின்: அபோட் நிறுவனத்தின் பெவாசிசுமாப் ஊசி மருந்து ₹22,031.25-ல் இருந்து ₹5,930.13 ஆகவும், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் அசாசிடிடின் ஊசி மருந்து ₹6,337-ல் இருந்து ₹1,495.04 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

  • டசானத் 20 (Dasatinib): 60 மாத்திரைகள் கொண்ட தொகுப்பின் விலை ₹2,812.50-ல் இருந்து ₹1,085.93 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

List of major anti-cancer brands with revised prices

Formulation

Brand Name

Company Name

Old MRP (₹)

Revised MRP (₹)

Bevacizumab 100 MG Injection: Used for Lung, Colon, Ovary and Cervical Cancer

Bryxta

Zydus Lifesciences Limited

25,995.00

3,318.00

BevaciRel

Reliance Life Sciences Private Limited

24,079.00

3,985.00

CIZUMAB

HETERO HEALTHCARE LTD

15,658.00

3,103.00

Versavo

Dr. Reddys Laboratories Limited

7,686.00

3,504.23

Denosumab 60 MG Injection: Used for breast and prostate cancer (prevents bone loss)

DenOsteoRel

Reliance Life Sciences Private Limited

24,955.00

6,240.00

Debrumab

RPG LIFE SCIENCES LTD

22,031.25

5,941.00

Denoclast

Zydus Lifesciences Limited

19,687.50

7,334.84

ROZEL

INTAS PHARMACEUTICALS LTD

15,458.40

6,825.50

Abiraterone acetate 250 MG Tablet: Used for Prostate Cancer

ABIRONE

ARVINCARE PHARMA PVT LTD

41,250.00

3,218.23

ABIRAT

Khandelwal Laboratories Private Limited

36,088.81

4,064.48

AHABIR

HETERO HEALTHCARE LTD

33,876.50

4,925.00

Abirapro

Glenmark Pharmaceuticals Ltd.

28,744.00

5,768.00

Pegfilgrastim 6 MG Injection: To prevent neutropenia in cancer patients

PEG FILTERO

HETERO HEALTHCARE LTD

9,093.00

1,631.00

Peg-ReliGrast

Reliance Life Sciences Private Limited

5,331.00

1,258.00

Pegex

Gennova Biopharmaceuticals Ltd.

6,270.45

1,527.78

Peg Frastim

RPG LIFE SCIENCES LTD

6,660.85

1,807.00

Azacitidine 100 MG Injection: Used for Blood Cancer

AzatiRel

Reliance Life Sciences Private Limited

7,790.00

1,397.00

AZADINE

INTAS PHARMACEUTICALS LTD

5,964.70

1,199.50

Azacytin

Dr. Reddys Laboratories Limited

6,337.00

1,495.04

Azadual 100

MSN LABORATORIES PRIVATE LIMITED

4,852.03

1,207.80

Enzalutamide 40 MG Capsule: Used for prostate cancer

ENZAPTOR 40

HALSTED PHARMA PVT LTD

20,625.00

2,475.60

XTIDE

ERIS LIFESCIENCES LIMITED

10,828.12

1,729.21

Enzuta

Emcure Pharmaceuticals Ltd.

20,667.00

4,157.65

ENZAMIDE

INTAS PHARMACEUTICALS LTD

10,781.25

3,536.50

Fulvestrant 250 mg Injection: Used for breast cancer

FASNORM

ERIS LIFESCIENCES LIMITED

30,421.87

3,671.73

FULZOS

HETERO HEALTHCARE LTD

16,500.00

3,215.00

Fulvira

Emcure Pharmaceuticals Ltd.

16,694.95

3,900.41

FISTENT INJ

Adley Formulations Pvt.Ltd

22,600.00

6,031.50

Palbociclib 125 MG Capsule: Used for breast cancer

Palbopro

RPG LIFE SCIENCES LTD

40,421.33

2,720.00

PALBOMED

Medicamen Biotech Limited

13,500.00

2,302.00

PICLIB

HETERO HEALTHCARE LTD

7,801.50

2,058.00

Palborest 125

MSN LABORATORIES PRIVATE LIMITED

2,246.00

791.80

Pemetrexed 500 MG Vial: Used for lung cancer

ReliTrexed

Reliance Life Sciences Private Limited

9,977.00

1,113.00

PEMETOMED

Medicamen Biotech Limited

5,062.00

940.00

ADPEM 500

Adley Formulations Pvt.Ltd

5,499.00

1,035.05

Pemgem

Dr. Reddys Laboratories Limited

7,032.00

3,408.64

Pertuzumab 420 MG Injection: Used for breast cancer

LUPIHER 2

Lupin Limited

83,520.00

37,358.35

Womab

Dr. Reddys Laboratories Limited

74,992.50

53,708.19