குட் நியூஸ்..! நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

 
1

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கியத் துறைகளுக்காக மொத்தம் 54 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாரத் ஆத்யோகிக் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நவீன தொழிற் பூங்காக்களை உருவாக்க 33 ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பருத்தி விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், குறைந்தபட்ச கொள்முதல் விலையை உறுதி செய்யவும் 11 ஆயிரத்து 712 கோடி ரூபாயும் நிதியை இந்தியப் பருத்திக் கழகத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பாராபங்கி – பஹ்ரைச் இடையேயான 101 கிலோ மீட்டர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ஆறாயிரத்து 969 ரூபாயும், சிறு நீர்மின் சக்தி மேம்பாட்டுத் திட்டத்தில் 1,500 மெகாவாட் திறன் கொண்ட சிறு நீர்மின் திட்டங்களை ஊக்குவிக்க இரண்டாயிரத்து 585 கோடி ரூபாயும் ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.