குட் நியூஸ்..! விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம்..!

 
1

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்றுவிட்டு, அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகில் செல்லவேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக விவேகானந்தர் பாறையில் இருந்து நேரடியாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையில் தொங்குபாலம் அமைக்க திட்டமிடப்பட்டு ரூ.37 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் ரூ.37 கோடியில் குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல் சார் பாதசாரிகள் பாலம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.