குட் நியூஸ்..! தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்..!
தமிழக எம்.பி. விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசியதாவது:-
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரெயில் நிலையங்களை மேம்படுத்த நாட்டில் இதுவரை 1,337 ரெயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்களை இந்த திட்டத்தின்கீழ் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் விருத்தாசலம், திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையங்களும் அடங்கும்.
இதுவரை தமிழ்நாட்டில் 17 ரெயில் நிலையங்களில் இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுக நிலையம், பெண்ணாடம் ரெயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்காக கடந்த 4 ஆண்டு மற்றும் நடப்பாண்டில் ரூ.5 ஆயிரத்து 449 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.4 ஆயிரத்து 439 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.


