குட் நியூஸ்..! 1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சியின் அசத்தல் மூவ்..!
ஐதராபாத் மாநகரப் பகுதியில் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஐதராபாத் மாநகரப் பகுதியில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) மற்றும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளுக்குப் பதிலாக, களிமண் சிலைகளை நிறுவ வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சுற்றுச்சூழல் நலன் கருதி இன்று முதல் மாநகரவாசிகளுக்கு 1.33 லட்சம் களிமண் விநாயகர் சிலைகள் இலவசமாக விநியோகிக்கப்படும்
இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், ஹெச்.எம்.டி.ஏ (HMDA) புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நகரின் பல்வேறு இடங்களில் 80,000 எட்டு அங்குல உயரமுள்ள களிமண் விநாயகர் சிலைகளையும், 53,000 ஒரு அடி உயரமுள்ள களிமண் சிலைகளையும் இலவசமாக விநியோகிக்க உள்ளது. இந்தச் சிலைகள் வெவ்வேறு தேதிகளில் 31 வெவ்வேறு இடங்களில் விநியோகிக்கப்படும்.
HMDA-விடம் மூன்று நடமாடும் விநியோக மையங்களும் இருக்கும். அவை வெவ்வேறு இடங்களுக்குச் சென்று சிலைகளை விநியோகிக்கும். ஒரு மையம் புதன்கிழமை அன்று ஹைதராபாத் ஜிந்தாபாத் அலுவலகம் அருகே உள்ள பாக் லிங்கம்பள்ளியில் இருக்கும். மற்றொரு மையம் வெள்ளிக்கிழமை அன்று சைதன்யா மஹிளா மண்டலி, MCRHRD, டெலிகாம் மகளிர் நலச் சங்கங்கள் மற்றும் சம்ஸ்கிருதி டவுன்ஷிப் ஆகிய இடங்களுக்கு இடையே சென்று, குடியிருப்பு நலச் சங்கங்களில் செயல்படும். மற்றொரு நடமாடும் மையம் சனிக்கிழமை அன்று மியாபூர், மாதாபூர் மற்றும் KPHB ஆகிய இடங்களுக்கு இடையே செல்லும்.

