குட் நியூஸ்..! பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை…!
காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள இயக்குனர் வெளியிட்டுள்ளனர். அதில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ல் தொடங்கி, 26ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும். 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10ம் தேதி துவங்கி,
25 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இது வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அடுத்து சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலாண்டு தேர்வு செப்டம்பர் 18ஆம் தேதி வியாழன் அன்று தொடங்குகிறது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 26 வெள்ளி வரை நடைபெறுகின்றன.
அதன்பிறகு காலாண்டு விடுமுறை தொடங்கிவிடும். செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதில் செப்டம்பர் மாதம் மட்டும் எடுத்துக் கொண்டால் 4 நாட்கள் காலாண்டு விடுமுறை வருகிறது. இதற்கிடையில் இரண்டு வார இறுதி விடுமுறை வரவுள்ளது. இதில் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கின்றன. அப்படி பார்த்தால் 4+4+3 என செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் விடுமுறை வருகிறது.

