குட் நியூஸ்..!! இன்று தங்கம் விலை ரூ.2,160 அதிரடியாக குறைந்தது..!!
Mar 19, 2026, 10:01 IST1773894668298
ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. பணவீக்கம், திடீர் பொருளாதார சரிவு, டாலர் மதிப்பு குறைவு போன்ற பல்வேறு காரணங்கள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இதனால் தங்கம் விலை பெரும்பாலும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அதிலும், உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் பங்குச்சந்தை சரிவை சந்திக்கும் போது முதலீட்டாளர்கள் உடனடியாக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தை தேர்ந்தெடுப்பர்.
ஆனால் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போரானது நேரெதிரான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போர் தொடங்கிய முதல் நாளே தங்கத்தின் விலை திடீரென ஏற்றம் கண்டது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து வருகிறது. இதற்கு முதலீட்டாளர்கள் எதன் மீதும் முதலீடு செய்யாமல், இருப்பில் வைத்திருக்கும் தங்கத்தை விற்பனை செய்து வருவதே காரணம் என்று கூறப்படுகிறது.
ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 18) ரூ. 640 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,16,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (மார்ச் 18) ஒரு சவரன் ரூ.116,560-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.2,160 குறைந்து, ரூ.114,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் நேற்று ரூ.14,570-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.265-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.

