குட் நியூஸ்..!! தங்கம் விலை மளமளவென குறைந்தது..!!
பொதுவாக உலக நாடுகளிடையே போர் மூண்டால் உலகின் முக்கிய வர்த்தகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, போர் காலங்களில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாக்கும் நோக்கில் தங்கத்தின் மீது முதலீடு செய்வர். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி இறுதியில் மூண்ட அமெரிக்கா - ஈரான் இடையேயான போரானது இந்த கருத்தை மாற்றியமைத்தது.
மார்ச் மாதத்திலிருந்து தங்கம் விலை சரசரவென சரிந்தது. இதனால் குறைந்த அளவில் தங்கம் வாங்குகிற நகை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கச்சா எண்ணெய் கொள்முதல், டாலர் மதிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறிவந்தனர்.
ஆனால் வட்டி விகிதம் குறித்த அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய முடிவானது உலகளாவிய தங்கம் வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைக்கு வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை என்ற தகவலால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 10 நாட்களுக்குள் ரூ. 8 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.
தங்கம் விலை இன்று (ஆக.19) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹85 குறைந்து ₹14,205-க்கும், 1 சவரன் ₹680 குறைந்து ₹1,13,640-க்கு விற்பனையாகிறது. வெள்ளியும் ஒரு கிராம் ₹5 குறைந்து ₹250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

