குட் நியூஸ்..!! இனி ஆண்களுக்கும் பஸ்களில் கட்டணம் குறைகிறது..!!

 
Q

காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, தமிழகத்தில் புறநகர் பஸ்களிலும் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களில் ஆண்களுக்கும் கட்டண சலுகை கிடைத்துள்ளது. இது ஆண் பயணிகளிடையே இன்ப அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.38 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று நெல்லை-தூத்துக்குடி இடையே இடைநில்லா எண்ட் டூ எண்ட் பஸ்களில் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.40-ம், சாதாரண பஸ்களில் ரூ.35 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் 128 பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றிப்பயணம் பஸ்களில் ஆண்களுக்கு 10 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம் 7 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் பஸ்களில் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது. 65 பஸ்களில் ஆண்களுக்கும் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.

திருச்சி கோட்டத்தில் 43 எக்ஸ்பிரஸ் பஸ்கள் சாதாரண கட் டண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து துறையூருக்கு வழக்கமாக எக்ஸ்பிரஸ் பஸ்சாக இயக்கும்போது ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டது. 'வெற்றிப் பயணம்' திட்டத்தில் ஆண்களுக்கு ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.